தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் நீதியை வலியுத்தியும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் கடுமையான பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் இணையப் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றை உடனடியாக நீக்க வலியுறுத்தியும் லண்டன் நகரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்னால் அமைதிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமிழீழ சுயநிர்ணய அமைப்பு, சர்வதேச நிழீழ மக்கள் சங்கம் மற்றும் பல தமிழ் தேசிய அமைப்புகளின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான தமிழர்கள் தேமிழீழ தேசயிக் கொடிகளை ஏந்தியவாறு ”நீதியும் சுயநிர்ணயமம் தமிழீழத்திற்கே!” என்ற ஒற்றுமை முழக்கத்தை முன்வைத்து தங்களது கண்டனங்களையும் கோரிக்கைகளையும் பதிவு செய்தனர்.





