செம்மணி, தையிட்டிப் போராட்டம்
கலந்து கொள்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டது.
2025-06-01ஆம் திகிதி
சிவகுரு ஆச்சிரமம் –
தவத்திரு வேலன் சுவாமி வளாக மண்டபம்.
2025-06-01ஆம் திகதி தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றக்கோரிய ஆர்ப்பாட்டப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தவத்திரு வேலன் சுவாமிகளை அழைப்பதற்கான ஒன்றுகூடல் நடத்தப்பட்டது. அதே ஒன்று கூடலில் 2025-06-05ஆம் திகதி ஏற்பாடு செய்துள்ள செம்மணி தமிழ் இனப்படுகொலையும் புதைகுழிக்குமான நீதியான விசாரணையை விரைவாக முன்னெடுப்பதற்கு வலியுறுத்திய போராட்டத்திலும் கலந்து கொள்வதற்குமான அழைப்பு போராட்ட ஏற்பாட்டாளராகிய முன்னாள் போராளி குலசேகரம் அவர்களால் தவத்திரு வேலன் சுவாமிக்கு விடுக்கப்பட்டது.
இப்போராட்டத்தில் தவத்திரு வேலன் சுவாமிகள், முன்னாள் போராளி குலசேகரம், கோநிலவன் ஆகியோர் முன்னின்றனர்.









