தமிழ் ஈழ மாவீரர்கள்
Warriors of Tamil Heritage
Tamileellam.com
Website Logo

உலகத் தமிழ் உறவுகளுக்கு வணக்கம்

எம் இனத்தின் விடுதலைக்காக தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வழிநடத்தலில் களமாடி, உடல்–உயிர்–ஆவி அனைத்தையும் விடியலுக்காக தியாகம் செய்தவர்கள் மாவீரர்கள். தம் இளமையையும் உயிரையும் துச்சமாகக் கருதி, இலட்சியமும் கொள்கையும் பிசகாமல் போராடி வெற்றிக்காக தியாகமானார்கள். இவர்களின் அளப்பரிய தியாகம் வீணாகிப் போகக் கூடாது என்பதே எம் அனைவரின் ஆதங்கம். தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் எங்கெல்லாம் ஈழத்தமிழர்கள் வாழ்கிறார்களோ, அங்கெல்லாம் மாவீரர்களின் தியாகம் போற்றப்பட்டுக் கொண்டே இருக்கும். உரிமை மறுக்கப்பட்ட இனத்தின் விடுதலைக்காக நீதி, நியாயத்துடன் உயிர்தியாகம் செய்த அவர்கள் வரலாற்றில் என்றும் நிலைத்திருப்பார்கள்.

“எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே. அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணங்கள் வளர்ந்து சிறந்ததும் இந்நாடே”

என்று புரட்சிக் கவிஞன் பாரதி பாடியதற்கு நிகரான சொர்க்க பூமி இது; இங்கு எம் மூதாதையர் வாழ்ந்தனர். பாசிச வெறியால் அந்தப் பூமி சின்னாபின்னமாக்கப்பட்டாலும், வரலாறும் பண்பாடும் கொண்ட ஈழத்தமிழர்கள் தம் உரிமைக்காக ஒன்றிணைந்தனர். அரசியல் முரண்பாடுகளால் வெடித்த போராட்டத்தில் பலர் வீரமரணம் அடைந்து மாவீரர்களானார்கள்; அவர்கள் என்றும் போற்றப்பட வேண்டியவர்கள்.

எம் இனத்தின் விடுதலைக்காக தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வழிநடத்தலில் களமாடி, உடல்–உயிர்–ஆவி அனைத்தையும் விடியலுக்காக தியாகம் செய்தவர்கள் மாவீரர்கள். தம் இளமையையும் உயிரையும் துச்சமாகக் கருதி, இலட்சியமும் கொள்கையும் பிசகாமல் போராடி வெற்றிக்காக தியாகமானார்கள். இவர்களின் அளப்பரிய தியாகம் வீணாகிப் போகக் கூடாது என்பதே எம் அனைவரின் ஆதங்கம்.

எமது நிகழ்வுகள்

view more