பெண் விடுதலைக்கு வித்திட்ட 2ஆம் லெப் மாலதி “பெண் அடிமைத்தனத்தின் விலங்குகளை உடைத்தெறியாத எந்த ஒரு நாடும், எந்த ஒரு சமூகமும், முழுமையான சமூக விடுதலையைப் பெற்றதாக கூறமுடியாது…” தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்-
மாலதி என்ற இயக்கப் பெயரால் அறியப்படும் சகாயசீலி பேதுருப்பிள்ளை 4 சனவரி 1967ஆம் நாள் பிறந்தவர். போரில் இறந்த விடுதலைப் புலிகளில் முதல் பெண் போராளி. எனவே முதல் பெண் ஈகியாக இவர் போற்றப்படுகிறார். இவர் வீரமரணமடைந்த 10 ஒக்டோபர் 1987 ஆம் நினைவு நாள் மகளிர் எழுச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது.

