1966-02-11ஆம் நாள் யாழ்ப்பாணம் மாதகல் என்னும் இடத்தில் பிறந்தவர். விடுதலைப்புலிகளின் அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியின் பொறுப்பாளராய் பணியாற்றியவர்.
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி, அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிப் பொறுப்பாளனாக முத்திரை பதித்தவன்.
அவன் மீது கொள்ளை அன்பை வைத்திருந்த தலைவர், உயிராய்ப் பழகிய நண்பர்கள், அவனால் உருவான போராளிகள், அவனைக் காத்த மக்கள் என்று தமிழீழம் அழுது துடித்தது.
எங்கள் போராளிகள் மனத்தில் நிறைந்துவிட்ட இனியபுயல், இறுகிய பாறை.
அடிக்கடி ரவைகளால் தைக்கப்பட்டு, பிய்பட்டு, இரத்தம் கொட்டி, தழும்புகளால் நிறைந்த தேகம்.
அவனது மனம் மட்டும் தளரவில்லை அது இறுகிப் பாறையாய் உருவாகியிருந்தது.
1987ன் தொடக்கப் பகுதியில் ஓர் இருண்டபொழுது. யாழ். காவல்துறை நிலைய தங்ககமும் தொலைத்தொடர்புக் கட்டடமும் கோட்டைக்குத் துiணாய் நிமிர்ந்து நின்றன.

