பெரியமடு மன்னாரில் 1972-02-03ஆம் நாள் பிறந்த இம்மாவீரன் ஓயாத அலைகள்-03′ இன் முழுமைப்படுத்தப்பட்ட அத்தியாயத்தில் ராஜன் தனது அழியாத தடங்களைப் பதித்தான். அதுதான் அவனைப் போரியலில் மேலும் வளர்த்து விட்டது. அதுதான் ராஜனை எமது இயக்கத்திற்கு அப்பால் வெளியே அறிமுகமாக்கியது. அதிலும் சில இறுக்கமான கட்டங்களில் ராஜன் ஆற்றிய பணிகள் அவனை எம் வரலாற்றில் என்றைக்குமே வாழவைக்கும் வலிமை வாய்ந்தவை.
1990 இன் முற்பகுதியில் மன்னார் மாவட்டப் போர்க்களங்களிற் சிறிய அணிகளுடன் களமிறங்கி, முப்பத்தைந்திற்கு மேற்பட்ட போர்க் களங்களில் அணிகளை வழிநடத்தி, பெரும் போர்வீரனாய் உருவெ டுத்து நின்ற எங்கள் தளபதி ராஜனின் களவாழ்வின் அத்தியாயத்தைப் புகழ்பூத்த இத்தாவிற் (கண்டி வீதி) போர்க்களத்திலிருந்து தொடங்கு வதுதான் பொருத்தமானது. 2000-06-26ஆம் நாள் வீரச்சாவைத்தழுவினார்.

