விடுதலையின் முதல் வித்து
உரும்பிராய் பொன் சிவகுமாரன் நினைவேந்தல்.
2025-06-05ஆம் திகிதி
உரும்பிராய் சிவகுமாரன் நினைவாலயம்.
தமிழின விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த முதல் தியாகி பொன் சிவகுமாரனின் 51 ஆவது நினைவுதினம் 2025-06-05ஆம் திகதி வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் அமைந்துள்ள பொன் சிவகுமாரனின் நினைவு தூபியில் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது சுடர் ஏற்றப்பட்டு, பொன் சிவகுமாரனின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நினைவேந்தலில் முன்னாள் போராளி குலசேகரம், கோநிலவன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் முன்னாள் பாராளு மள்ற உறுப்பினருமாகிய செல்லையா கயேந்திரன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆதரவாளர் கள், பொன் சிவகுமாரனின் சகோதரி மற்றும் குடும்ப உறுப்பினர்கள், முன்னாள் போராளிகள் அமைப்பு, தமிழ்த்தேசிய ஆதரவாளர்கள் என்போர் கலந்து கொண்டனர்.









