எந்தவொரு மனித இனத்திற்கும்; வரலாறு என்பது அவசியமாகும். வரலாறு கண்ட ஈழத்தமிழர்கள் தமக்கென்றொரு பூர்வீகத்தினையும் வரலாற்றினையும் பண்பாட்டினையும் கொண்டவர்கள். நாட்டில் ஏற்பட்ட அரசியல்; முரண்பாடுகளின் விளைவாக மாபெரும் போராட்டம் எம் மண்ணில் வெடித்தது. இப்போராட்டத்தில் தம்மை பலர் இணைத்தனர். தமிழர்களின் வாழ்வே போராட்ட களமாகியது. போராட்டம் உக்கிரமடைந்தது. பலர் சமர்க்களத்தில் வீரமரணமடைந்தார்கள். மாவீரர்களானார் கள். மாவீரர்கள் என்றும் போற்றப்படவேண்டியவர்கள். எம்மினத்தின் விடுதலைக்காக தேசியத்தலைவன் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வழிபடுத்தலில் களமாடி ஆகுதியானவர்கள். அவர்கள் உடல், உயிர், ஆவி;. அனைத்தையும் விடியலுக்காக தியாகம் செய்த மா மனிதர்கள். அவர்கள் தம் இளமைக் காலத்தைத் துறந்து தமதுயிரை துச்சமென நினைத்து தம் இனத்தின் விடுதலை வேள்விக்காய் அர்ப்பணித் தார்கள். இலட்சிய வழியில் கொள்கைக்காக இம்மியும் பிசகில்லாது பூண்ட கொள்கையின் வெற்றிக்காய் ஆகுதியானார்கள். இவர்களது அளப்பரிய தியாகம் வீண்போகக்கூடாது என்னும் ஆதங்கத்தோடு தாயகம் மட்டுமல்லாது புலம்பெயர்தேசங் களில் எங்கெல்லாம் ஈழத்தமிழர்கள் வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் மாவீரர்களின் தியாகம் போற்றப்பட்டுக் கொண்டேயிருக்கும்.
உலகம் போற்றுகின்ற மாவீர்கள் பலர் இருக்கலாம். குறிப்பாக மாவுpரன் அலெக்சாண்டர், மாவீரன் ஜூலியஸ்சீசர், மாவீரன் நெப்போலியன் எனப் பட்டியல்கள் நீண்டு செல்லும். இத்தகையோர் தம் இனத்தின் எழுச்சிக்காகவும் மக்கள் வாழ்விற்காகவும் தலைமை தாங்கினர். வழிப்படுத்தினர். தம் விவேகம் நிறைந்த செயல்கள், புத்திசாதுரியமான வழிமுறைகளால் போரில் வென்றனர். மக்கள் நலன்சார்ந்த பணிகளில் உயர்ந்தனர். மாவீரர்களாகப் போற்றப்பட்டனர். ஆனால் எமது உறவுகள் அடக்கி ஒடுக்கி வாழ்வுரிமை மறுக்கப்பட்ட இனத்தின் விடுதலை வேண்டிப் போராடினார்கள். அவர்களின் போராட்டத்தில் நீதியும் நியாயமும் இருந்தது. உலக சாம்ராட்சியங்களைக் கட்டி எழுப்பும் தலைமுறை கடந்த போராட்டமாக இருக்கவில்லை. உரிமை மறுக்கப்பட்ட இனத்தின் விடுதலைக்காய் எதிரியோடு சமராடி தம்உயிரை மாய்த்தார்கள்.
போராட்ட நுணுக்கங்களாலும் அதீத துணிச்சலினாலும் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்திய எம்மறவர்களின் தியாகயங்கள் ஒன்றல்ல இரண்டல்ல. இவர்கள் ஒன்றும் தேவர்களாகவோ, அனுமானுசிய சக்திகளால் ஆட்பட்டவர்களாகவோ இல்லை. எம்மைப்போன்ற சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்கள். பொருளாதாரத்திலும் வாழ்வின் வசந்தத்திலும் திழைத்தவர்கள் அல்ல. இனத்தின் விடிவிற்காய் எம்முள் இருந்து முகிழ்த்தெழுந்தவர்கள். இவர்களின் அர்பணிப்பினால் வீறுகொண்ட விடுதலைப் போராட்டத்தை பார்த்து பொறுக்க முடியாத பல நாடுகளும் அரசுகளும் திட்டமிட்டு தடை செய்தனர். இத்தடை களையும் தாண்டி தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஆகுதியானார்கள். இத்தகைய தியாகத்தின் உணர்வெழுச்சியை சந்ததி சந்ததியாக போற்றுவதற் குரிய ஏற்பாட்டினை தாயத்திலும் புலம்பெயர்ந்த தேசங்களிலும் வாழுகின்ற ஈழத்தமிழர்கள் உணர்வெழுச்சியோடு போற்றி வருகின்றனர். குறிப்பாக பிரித்தானியா, கனடா, சுவிஸ்லான்ட், பிரான்ஸ், அவுஸ்ரேலியா, நோர்வே, அமெரிக்கா இன்னும் பல நாடுகளில் வாழ்ந்து வருகின்ற ஈழத்துத் தமிழ்ச்சமூகம் ஒருமித்து நினைவேந்தல் செயற்பாட்டில் சங்கமித்து வருவது வரலாறாகியுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசு, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, தமிழ் தகவல் நடுவம் மற்றும் புலம்பெயர் தேசங்களில் செயற்பட்டு வருகின்ற தமிழர் நலன் காக்கும் அமைப்புகள் ஒன்றிணைந்து முன்னெடுத்து வருவது எம்மினத்தின் ஒற்றுமையின் அவசியத்தை இதனூடாக புலப்படுத்தி நிற்கின்றமை உணரப்படுகின்றது. தாயகத்தில் மக்களை அணிதிரட்ட வேண்டிய அரசியல் கட்சிகள் ஒன்றிணையாமல் மாவீரர் நினைவேந்தலை யார் செய்வது என்ற போட்டி மனப்பாங்கில் அரசியல் வேலைத்திட்டமாக முன்னெடுத்து வருவது மிகவும் வேதனைக்குரியதும் கண்டிக்கபடவேண்டியது மாகும். நினைவேந்தல் விடயத்தில் தமக்குள் இருக்கின்ற கட்சி வேறுபாடுகளை மறந்து மூத்த ஒருவரது தலைமையில் நினைவேந்தலை செய்து மெல்ல மெல்ல மறந்து வருகின்ற இளைய தலைமுறையினரிடம் கையளிக்கவேண்டிய பொறுப்பும் கடமையும் இவர்களுக்குண்டு என்பதனை மறந்து விட்டார்கள்.
நாடு கடந்த தமிழீழ அரசால் தேசிய கொடி நாள் பிரகடனப்படுத்தப்பட்டு உலகின் பல நாடுகளில் மாவீரர் நாளின் ஆரம்ப நாளன்று கொடியேற்றி பிரகடனப்படுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து மாவீரர் வாரத்தின் நிறைவு நாள் வரை பல இடங்களிலும் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்தார்கள்.
கனடா
கனடிய தேசத்தில் வாழ்கின்ற எம் உறவுகள் நாடுகடந்த தமிழீழ அரசின் கொடி தின ஏற்பாட்டினை அந்நாட்டின் மாநில பிதாவினைக் கொண்டு ஏற்றி உலக அங்கீகாரம் கொண்ட கொடியாக தமிழரின் தலைநிமிர் கொடியாக அங்கீகாரம் ஏற்படுத்தினார்கள். இதனைப் நாம் அனைவலும் கண்டு உளம் குளிர்ந்தோம் . இருந்தும் பல விமர்சனங்களை தெரிவித்துக் கொண்டாலும் மாவீர்களின் நினைவேந்தல் நிகழ்வானது மேலும் பேரெழுச்சியுடன் நடைபெற்றதை அவதானிக்க முடிந்தது.
லண்டன்
லண்டன் தேசத்தில் வாழ்கின்ற உறவுகள் தேசிய கொடிநாளினையும் அதனுடன் இணைந்ததாக இரத்தான முகாம்களையும் மாவீரர் பெற்றோர் களை மதிப்பளிக்கும் நிகழ்வுகளையும் ஒழுங் கமைத்தது மட்டுமல்லாது நிறைவாக நினைவேந் தலை லண்டன், ஸ்கொட்லான், ஒக்ஸ்போட்;, விம்பிள்டன், வேல்ஸ் எனப்பல மாநிலங்களில் நினைவேந்தலை ஒழுங்கமைத்து தமதுறவுகளின் நினைவை பகிர்ந்து கொள்வதற்கு தமது குடும்பம் சகிதம் பிரசன்னமாகியமையும் வெளிச்சசமிட்டு காண்பித்தது.
பிரான்ஸ்
பிரான்ஸ் தேசத்தில் வாழ்கின்ற உறவுகள் மிகவும் சிறப்பான ஒழுங்கமைப்பில் ஒரு கட்டமைப்பில் நினைவேந்தலை செய்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு ஏனை நாடுகளிலும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற நினைவேந்தலினூடாக ஒடுக்கப்பட்ட எம்மினத்தின் வாழ்வுரிமைக்கான நியாயபூர்வமான தீர்வு எட்டப்படவேண்டும் என்ற செய்தியினை உலகத்திற்கு வலுவாக எம் உறவுகள் வெளிப்படுத்தியுள்ளனர் என்பதுதான் இங்கு வெள்ளிடைமலை.
போராட்டத்தின் உச்ச நிலையில் நாம் எம்மை மறந்தவர்களாக எமது பண்பாட்டை துறந்தவர்களாக வாழப்பழகி விட்டோம். குறிப்பாக அந்நியப் பண்பாட்டின் மோகத்திற்குள் வாழப்பழகினோம். உதாரணமாக எமது வீடுகளில் நடைபெறுகின்ற மரண நிகழ்வுகளில் கறுப்புக்கொடிக்குப் பதிலாக வெள்ளைக்கொடி கட்டுகின்ற மரபினையும் வரவேற்பு நிகழ்வுகளில் வெற்றிலை கொடுத்து வரவேற்பதும் நாகரீகமாக் எம்மினத்தில் புகுந்த காலத்தின் அடையாளங்களாகும். இவ்வாறான மரபு மாற்றத்தினை முற்றிலும் புறக்கணித்தவர் களாக எமது சமயம் ,கலை ,கலாசாரம், பண்பாடு, மொழி. ஒழுக்க விழுமியங்களை மீறாதவர்களாக புலம்பெயர் தேசங்களில் வாழ்ந்து வருகின்ற உறவுகளின் சிறந்த செயற்பாடுகள்; நிச்சமான எமது இனத்தின் ஆரோக்கியத்திற்கு முன்னுதாரணமானவைகளாக அமையும் என்பதில் ஐயமில்லை.








