தமிழ் ஈழ மாவீரர்கள்
Warriors of Tamil Heritage
Tamileellam.com
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கெதிரான போராட்டம்
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கெதிரான போராட்டம் 2025-06-10ஆம் திகதி காங்கேசன்துறை தையிட்டி விகாரை
தையிட்டிpயில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையில் விசேட பௌர்ணமி தினமாகிய 2025-06-10ஆம் திகதி தென்னிலங்கையிலிருந்து 2000 பக்தர்களுடன் குண்டர்களையும் விகாரைக்கு அழைத்து வருவதற்கு திட்டமிட்டுள்ளதை எதிர்த்து தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றக்கோரிய ஆர்ப்பாட்டப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டத்தில் முன்னாள் போராளி குலசேகரம், கோநிலவன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் முன்னாள் பாராளுமள்ற உறுப்பினருமாகிய செல்லையா கயேந்திரன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆதரவாளர்கள், சட்டவிரோத காணியின் உரிமையாளர்கள், தமிழ்த்தேசிய ஆதரவாளர்கள் என்போர் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தில் ஈடுபடுவோரை தடுப்பதற்கும் கைது செய்வதற்கும் தயார் நிலையில் சிறிலங்கா பொலிசார் இராணுவத்தின் தணையுடன் தண்ணீர்வீசும் தாங்கி மற்றும் கலகத்தடுப்பு ஆயுதங்களுடன் தயாராக இருந்தனர்.