கேணல் சார்ள்ஸ் அண்ணாவின் வீரச்சாவு நிகழ்வில் வரி உடையுடன் வருவதை கண்ட பலருக்கும் அதிர்ச்சி. நீ ஒரு போராளியா என்ற அங்கலாய்ப்பு. அதுவரைக்கும் நீ ஒரு போராளி என்பதை எவரும் அறிந்திருக்கவில்லை. அன்று எல்லோருக்கும் தெரிந்தது நீ காக்கும் உன்னை பற்றிய இரகசியத்தின் தன்மை.
படையப்புலனாய்வின் பணிகளை விரிவாக்கும் செயற்றிட்டம் ஒன்றுக்காக கற்றலில் ஈடுபட்டாய். வெளிமாவட்டத்தில் தங்கி இருக்கும் இரகசிய போராளிகளுக்கான தொடர்பாடல்களை ஏற்படுத்துவது தொடர்பாக ஒரு மென்பொருளை உருவாக்க நீ முனைந்தாய். இரகசிய போராளிகள் பற்றிய இரகசிய விபரக்கோவைகளை பாதுகாக்கும் மென்பொருளையும் உருவாக்க முனைந்தாய். நிச்சயமாக அவை மட்டுமல்ல அதை விட நிறைய மென்பொருள்களை உருவாக்கி இருக்க வாய்பிருந்திருக்கும். இருப்பினும் அவற்றின் முழு விபரங்களை அறிந்திருக்கஎவருக்கும் வாய்ப்பில்லை. இம்மாவீரனின் விபரங்களை அறியமுடியவில்லை.

