லெப். கேணல். மதன் அவர்களின் உடன்பிறந்த அண்ணன் நளன் அவர்களும் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து திறமுடன் களமாடிய போராளியாக விளங்கினார். இம்ரான் பாண்டியன் படையணியில் செயற்பட்டு வந்த நளன் , வேவு நடவடிக்கைகளிலும் நிர்வாகப் பொறுப்பாளராகவும் திறமுடன கடமையாற்றினார். இறுதிச் சமரில் இம்ரான் பாண்டியன் படையணியின் தளபதிகளுள் ஒருவராக வீரத்துடன் களமாடிய நளன் 04-04-2009 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். தமிழீழ தாயக விடுதலைக்காக இரு மாவீரர்களை ஈந்த குடும்பமாக மதன் அவர்களின் குடும்பம் சிறப்பு பெற்றது.

