1960-12-11ஆம் நாள் பிறந்த இம்மாவீரர் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப்புலிகளின் ஆரம்ப கால தாக்குதல் தளபதியாக இருந்தவர். புனித மரியாள் வீதி திருகோணமலையைச் சேர்ந்த இவர் யாழ்ப்பாணம் சாவகச்சேரி மீசாலைப் பகுதியில் இலங்கை ராணுவத்தின் முற்றுகையிழன் போது ஏற்பட்ட சமரில் விழுப்புண்ணடைந்த நிலையில் தன்னைச்சுட்டுக்கொன்றுவிட்டு தனது துப்பாக்கியியுடன் ஏனைய போராளிகளை தப்பிச்செல்லமாறு பணித்த நிலையில் அப்போராளியால் சுடப்பட்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்டவர். 1983-07-15ஆம் திகதி வீரமரணமடைந்தார்.

