தமதுயிரை துச்சமென மதித்து கொண்ட லட்சியத்தின்பால் வீரகளமாடி ஏற்பட்ட காயத்தால் தமது உடலின் பாகங்களை இழந்தார்கள். அவர்களை நாம் போற்றி மதிக்க வேண்டும். அவர்கள் இன்று போரால் பாதிக்கப்பட்டு உடல் உறுப்புகளில் பாதிப்புடைய விசேட தேவையுடையவர்களாக வாழ்கின்றார்கள். அத்தகைய முன்னாள் போராளிகளை 2025 வைகாசி மாதம் சந்தித்து அவர்களுக்கு சிறு உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது. இவ் ஏற்பாட்டினை கிளிநொச்சி மாவட்ட மாற்று வலுவுள்ளோர் சங்கம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இச்சங்கத்தில் முன்னாள் போராளிகளே அங்கத்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு நிறைய உதவிகள் தேவைப்படுகின்றன. குறிப்பாக மருத்துவ உதவிகள், கைத்தொழில் முயற்சிக்கான உதவிகள், உலர்உணவு உதவிகள் என பல்வேறு தேவைகள் உள்ளன. அவர்களுக்கு உதவி செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ளலாம்.

