பாலசேகரம் கந்தையா என்னும் ,யற்பெயருடைய பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் 27-11-1965 ஆம் திகதி கொக்குத்தொடுவாய், முல்லைத்தீவில் பிறந்தவர். 20 மே 2008 ,) தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு முதுநிலை போர் முனைத் தளபதியாக விளங்கியவர். ஈழப் போர்களின் பல போர்க்களங்களை வழிநடத்தியவர். 1983ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ,ணைந்து கொண்டார். 1991ஆம் ஆண்டு தொடக்கம் 1993ஆம் ஆண்டு வரையும், பின்னர் 1995ஆம் ஆண்டு தொடக்கம் 1997ஆம் ஆண்டு வரையும் விடுதலைப் புலிகளின் முதலாவது மரபுவழிப் படையணியான சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் முதலாவது கட்டளைத் தளபதியாக அப்படையணியை வழி நடத்தியவர். வரலாற்றுச் சிறப்புமிக்க 2000ஆம் ஆண்டு ஆனையிறவுச் சமரில் முக்கிய பங்காற்றினார். சமர்க்கள நாயகன் எனப்போற்றப்பட்ட ,ம்மாவீரரது வீரம் உலகறிந்தது. வந்திருப்பது பால்றாஜ் என்று கூறி அலறி ஓடும் அளவிற்கு எதிரிகளை கலங்கடித்த வீரன்.
அமைதிப் பேச்சுக்களின் போது 2003ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பால்ராஜூக்கு ,ருதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 2008ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 3 மாதங்கள் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 2008-05-20 செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 2:00 மணியளவில் பால்ராஜ் மாரடைப்பால் வீரச்சாவடைந்தார்.

