ஓடக்கரை, பருத்தித்துறையைச் சேர்ந்த இம்மாவீரர் கனகநாயகம் ஞானேந்திரமோகன் என்னும் இயற்பெயர் பூண்டவர். 1960-09-02ஆம் நாள் பிறந்த இவர் விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவர். தொண்டைமானாற்றுப்பகுதியில் 1984-07-13ஆம் நாள் இலங்கை இராணுவத்தினரின் சுற்றி வளைப்பின்போது வீரச்hவடைந்தார்.

